நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு நாளை (20) நண்பகல் 12 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், அவதானத்துடனும் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது