விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரச் சிதாமஹாலக்ஷ்மி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய அனைத்து மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தன்னுடன் சீரியல் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர் கடந்த ஒரு வருடமாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
சமீபகாலமாக சமூகவலைதள பக்கத்தில் செம ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். எனினும் தற்போது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
தற்போது பிக்பாஸில் சிறப்பாக விளையாடி வரும் ரச்சிதாவிற்கு ஆதரவாக தொடர்ந்து, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் தினேஷ்.
ஆனால், ரச்சிதா இதுவரை தனது கணவர் குறித்து பிக்பாஸில் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்து வருகிறார். மேலும் இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரச்சிதா, விக்ரமனிடம் குழந்தையை தத்தெடுப்பது தொடர்பில் பேசியுள்ளார்.
மேலும் அதில் ‘”நான் என்னோட 35 வது வயதில் தான் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன், 35 வயது என்ற அளவுகோல் ஏன் வைத்தேன் என்றால், அப்போது தான் இன்னும் நிறைய கற்று கொண்ட அனுபவம் கிடைக்கும் அதன் மூலம் ஒரு குழந்தையை வளர்க்க கூடிய நம்பிக்கை எனக்கு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு விக்ரமன் ‘ஆண் குழந்தையா பெண் குழந்தையா’ என்று கேட்க அதற்கு ரச்சிதா‘பெண் குழந்தை தான். எனக்கு பெண் குழந்தை தான் ரொம்ப பிடிக்கும்.’ என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ரச்சிதா தனது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்பது போலவே தெரிகிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.
அதாவது தான் குழந்தை பெற்று பெற்றுக்கொள்ளாமல் தத்தெடுப்பாதாக கூறியுள்ள நிலையில் இவர் தனது கணவரையும் பிரிந்து தான் உள்ளார். இதனால் இவர்கள் சேரமாட்டார்களா என ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளார்கள்.
அத்தோடு சில ரசிகர்கள் ரச்சிதாவை பேசியும் வருகிறார்கள். ஆனால் இருவரும் மீண்டும் சேர வேண்டும் என சிலர் பிரார்த்தனையும் செய்து வருகின்றார்களாம்