தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் காமராஜ் இவர் மனைவி சாந்தி
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், ஊழியக்காரன் தோப்பில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்
மேலும் ஏலச்சீட்டு நடத்தி வந்த சாந்தி, கடந்த சில மாதங்களாக கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளார் இவருடன் இவரது மகன் ராம்குமார் வசித்து வந்தார் நேற்று இவர்களின் வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்
அப்போது சாந்தியும் அவரது மகன் ராம்குமாரும் வீட்டினுள் வெவ்வேறு இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்
இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் விரைந்து சென்று தாய் மகனின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது