தமிழகத்தில் பிரபலமடைந்து வரும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ்.
இதில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் தற்போது பெரிய பிரபலமாக திகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சி நேற்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகை, சினேகா, சங்கீதா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடுவராக இருந்து வருகிறார்கள்.
இதில் நடிகர் சிவகார்த்திகேயன், சாண்டி மாஸ்டர் மற்றும் றியோ என பல முக்கிய நட்சத்திரங்கள் விருந்தினராக கலந்து கொண்டனர்.
இவ்வாறு இருக்கையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர்தான் விஜய். இந்நிலையில் இவர் தாய் தந்தை பிரிந்து இருக்கும் குழந்தைக்கு உதவி செய்து வருகின்றார், இதனை யாருக்கும் கூறாத நிலையில் அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டது DJD குழுவினர்.
அந்த தருணம் அந்த பிள்ளை விஜய்யை நான் அண்ணனாக நினைக்கவில்லை அப்பாவாக தான் நினைக்கிறேன், அவரை நேரில் காண ஆசை எனக் கூறியதும் எமோஷ்னல் ஆகி கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விடுகின்றார் விஜய்.
அத்தோடு ஒரு பிள்ளைக்கு மட்டுமே உதவி செய்யும் நிலை மட்டுமே தற்போது உள்ளது. என்னும் 100 பிள்ளைகளுக்கு உதவி செய்யனும் எனக் கூறி இருந்தார்.
இதனையடுத்து அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். உடனே சிவகார்த்திகேயன் எழுந்து மேடைக்கு சென்று விஜய்யை கட்டி தழுவி அன்பை பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து தொகுப்பாளர் விஜய் பற்றி பல தகவல்களை பகிர்ந்திருந்தார் அதில் முக்கியமாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த நேரத்தில் அங்கே பலருடன் இணைந்து நிதி திரட்டிக்கொண்டு இலங்கை இருக்கும் நம்மட (தமிழ்) மக்களுக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து உதவியதாக யாருக்கும் தெரியாத ஒரு தகவலை பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் உண்மையில் தொகுப்பாளர் விஜய் வேற லெவல்தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.