நாகை அருகே மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் அவரது உடல் மேல் சாய்ந்து கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நாகூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் புயல்மணி, லட்சுமி நேற்றிரவு லட்சுமிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்த நிலையில், லட்சுமியின் உடல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது திருமணமாகி 41 ஆண்டுகள் கடந்த நிலையில் தனது மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அழுது கொண்டிருந்த புயல்மணி, அவரது உடல் மேல் சாய்ந்தவாறு தனது உயிரையும் விட்டார்
இதனையடுத்து இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினரின் உடல்கள் ஒன்றாக வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது