உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த ஏறத்தாழ 10 பில்லியன் ரூபா செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய தேர்தல் ஆணையம் (NEC) தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக NEC இன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் இறுதி வாரத்தில் கோரப்படும் என ஆணைக்குழு நேற்று அறிவித்தது.
உள்ளூராட்சி அமைப்புகளின் தேர்தல் (திருத்தம்) சட்டத்தின் விதிகளின்படி வேட்புமனுக்கள் கோரப்படும் என NEC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மட்டத்தில் 2022 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.