2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை மக்கள் எதிர்பார்க்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக தேர்தல் கோரி வருவதால் ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்த முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.
மார்ச் மாதத்திற்குப் பின்னர் தேர்தல்
இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குப் பின்னர் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் கூறினார்.
அதற்கமைய நிறைவேற்று அதிகார சபைக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்.