தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சியின் 6 சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 58 நாட்களை கடந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் தங்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஷிவின் கணேசன் என்பவர் பங்குபெற்றுள்ளார். நிகழ்ச்சியின் அரம்பத்தில் இருந்தே இவருக்கு ரசிகர் பட்டாளம் குவிந்துள்ளன.
இவ்வாறான நிலையில் இவர் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவருடைய உண்மையான பெயர் ரஞ்சன். இவர் வீட்டுக்கு ஒரே பையன் என்பதோடு இவருக்கு அக்காவும் ஒருத்தங்க இருந்துள்ளாங்க. இதற்கு பின் பெண்மையியை உணர்ந்த இவர் உடனே திருநங்கையாக மாறியுள்ளார்.
ஆனால் ஆரம்பத்தில் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை. இவருக்கு தந்தை சிறுவயதில் இறக்க இவரது தாயார் தான் இவர்களை பார்த்து கொண்டுள்ளார்.
பின் இவருக்கு ஆதரவு கொடுத்து இவரை வேலை செய்ய சிங்கப்பூர் அனுப்பி வைத்தார் இவரது தயார். இவர் 3 ஆண்டுகளாக அங்கு வேலை செய்துள்ளார்.
பின்னர் அங்கு தன்னுடன் வேலை செய்த நபரை காதலித்தும் உள்ளார் ஷிவின். தற்போது அந்த காதல் நீடிக்கவும் இல்லை.
அத்தோடு அங்கு மாடலாக மாறிய ஷிவின் கணேசன் சில ஆண்டுகள் சிங்கபூரிலேயே மாடலாக இருந்தார். அதற்குப் பின்னர் இவர் மீண்டும் இந்தியா வந்தார்.
தற்போது பிக்பாஸ் சீசன் 6இல் 21 போட்டியாளர்களுடன் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ஷிவினின் குடும்ப புகைப்படம் என்று கூறி இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஆனால் அந்த புகைப்படம் அவரது குடும்ப புகைப்படம் இல்லை. இதுவரை இவரது குடும்ப புகைப்படம் வெயாகவில்லை.
கேரளாவைச் சேர்ந்த சந்தியா மனோஜ் உடையது. இவர் பிக்பாஸ் சீசன்-3 இல் மலையாளத்தில் கலந்துகொண்டவர் . அவருடைய குடும்ப புகைப்படமே… இதோ அந்த புகைப்படம்.