இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) உத்தரவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க 30-11-2022 அன்று முதல், கடிதம் ஒன்றை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு ஆரம்பித்துள்ளார்.
இதன் அடிப்படையில் புலமைப்பரிசில்களை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.