மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சம்பவம் ஒன்று பலரையும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ஒவ்வாமை காரணமாக வைத்தியம் பார்ப்பதற்கு சென்ற பெண் ஒருவர் அங்கு சென்றிருந்த நிலையில் அருடன் சென்றிருந்த தாயார் அங்குள்ள விச தேனீ கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையினுள் சென்ற பின்னர் அவரது சிறிய மகனும் தாயாரும் வைத்தியசாலைக்கு வெளியில் நின்றுள்ளனர்.
சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த சமயம் ஒரு சிலர் கூச்சலிட்டுக் கொண்டு தேனி கொட்டுவதாக தெரிவித்து வைத்தியசாலைக்குள் வந்து ஒழிந்து கொண்டதுடன் கதவையும் பூட்டி விட்டனர்.
எனினும் குறித்த பெண்ணின் தாயாரும் எனது குழந்தையும் வெளியில் இருந்தனர். அத்தனை பேர் அங்கிருந்தும் அவர்களுக்கு ஒருவர் கூட உதவி செய்திருக்கவில்லை.
பதறியடித்து குறித்த பெண் வெளியில் ஓடி வந்து பார்க்கும் போது அவரது தாயார் தன்னை யாராவது காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டு கதறும் சத்தம் கேட்டதும் துடிதுடித்துப் போன மகள் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடியுள்ளார்.
அங்கு சென்று பார்த்ததும் அவரது தாயார் நான்கைந்து விச தேனீக்களால் கொட்டப்பட்டு வலியில் துடித்துள்ளார்.
அவரது குழந்தையை வைத்தியசாலைக்கு வந்த ஒரு சில நிமிடங்களிலேயே நெருங்கிய உறவினர் ஒருவர் வாங்கிக் கொண்டதாகவும் இல்லை என்றால் இந்த தேனீக்களால் தனது பிள்ளைக்கும் ஆபத்து நேர்ந்திருக்கும் எனவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து நடந்த சமயம் அங்கு அத்தனை ஆண்கள் இருந்தும் கூட, சீருடை அணிந்து காவலாளி ஒருவர் வாயிலில் நின்றும் கூட ஒருவருக்கும் தனது தாயாரை காப்பாற்ற மனம் வரவில்லை என்றும், இதை நினைத்து தான் துயரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நான் வந்து எனது தாயாரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் மட்டும் ஒருவரும் உதவி செய்யவில்லை என்றும் இது மனிதாபிமானம் அற்ற இடம் என்றும் குறித்த பெண் தனது கடும் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.