கடந்த 2009ல் வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன், சூரி, அப்புக்குட்டி உட்பட பலர் நடித்து, வெண்ணிலா கபடிக்குழு. இப்படம் தமிழகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் வெண்ணிலா கபடிக்குழு அணியில் இடம்பெற்ற நடிகர் ஹரி வைரவன், அப்படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு பணம் இன்றி தவித்துவருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் இன்று காலமாகியுள்ளதாக கூறபடும் நிலையில் தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.