காதுகளில் மிக நீளமான முடியுடைய நபராக இந்தியாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அன்டனி விக்டர் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
இவரின் காதுகளிலுள்ள முடியின் நீளம் 18.1 சென்ரிமீற்றர் (7.12 அங்குலங்கள்) ஆகும். 2007 ஆம் ஆண்டு அன்டனி விக்டர் உலக சாதனை படைத்தார்.
இந்நிலையில் தற்போதும் அவரின் சாதனை நீடிக்கிறது.
அதேவேளை முன்னர் காது முடியுடைய ஆசிரியர் என இவர் மாணவர்களால் அறியப்பட்டிருந்தார் என கின்னஸ் சாதனை பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.