இந்தியாவின் தலைநகர் டெல்லி மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இந்திய மக்கள் கடும் வசைபாடி வருகின்றனர் டெல்லியில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால் அங்கிருக்கும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இதனால், அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை கொடுக்க முடியாமல், மருத்துவமனைகள் திணறி வருகிறது. ஆக்ஸிஜன் இல்லாமல் ஏராளமான உயிர்பலிகளும் போய் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள, கோலவடா மருத்துவமனையில், ஆக்ஸிஜன் ப்ளாண்ட்-ஐ ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார்.இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாக, இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் மக்கள் செத்துக் கொண்டிருக்க, இந்த நேரத்திலும் உங்களுக்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையா என்று கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.