மக்காச்சோளம் இருப்புக்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு ஏறக்குறைய 60,000 திரிபோஷா பொதிகளை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்வதோடு தாய்மார்களுக்கான திரிபோஷா உற்பத்தியை தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்