தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் 50 நாட்களுக்கு மேலாக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6.
இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.
அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் எனும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு தரப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இந்த டாஸ்கில் ஒரு தரப்பினரை அடிமை என குறிப்பிட்டு இருக்கின்றனர். அது தவறு என விக்ரமன் பிக்பாஸ் குழுவிடம் வலியுறுத்தி இருக்கிறார். அதற்கு பிறகு தான் சேவகன் என அந்த வார்த்தை மாற்றப்பட்டு இருக்கிறது. விக்ரமனின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.