கொரோனா பெருந்தொற்றின் இராண்டாம் பேரலையின் பேரிடரை இந்தியா எதிர்கொள்கின்றது என பிரென்சு ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டு வருகின்றன.
உலகில் காணப்படுகின்ற உருமாறிய கொரோனா திரிபு வைரஸ்களை விட, தற்போது இந்தியாவில் காணப்படுகின்ற ‘கொரோனா’ இரட்டை திரிபு கொண்டதாதகவும், வேகமாக பரவும் தன்மை கொண்டதெனவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதோடு, மக்கள் நெரிசலாக வாழ்கின்ற பகுதிகளிலேயோ தொற்கு வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இது பிறேசிலில் ஏற்பட்டுள்ள சுகாதார பேரிடரை ஒத்ததாக காணப்படுகின்றது.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிகளவானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நாடாக இந்தியா தற்போது மாறியுள்ளது.
இம்மாதத்தில் மட்டும் இதுவரை 35 இலட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நாளாந்த வைரஸ் தொற்று 3 இலட்சத்தினை கடந்துள்ளதோடு, உயிரிழப்புகளும் 2 ஆயிரத்தை நாளாந்தம் கடக்கின்றது.
குறிப்பாக முச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கு வழங்குவதற்குரிய ஒக்ஸிஜன் வழங்கிகள் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியாக தோன்றியுள்ளது.
தலைநகர் டெல்லியில் மைதானங்களில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் எரிக்கப்பட்டு வருவதோடு, தாம் பெரும் ஆபத்துக்குள் சிக்குண்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். தெலுங்காணா மாநில முதல்வரும் இக்கருத்தினையே வெளிப்படுத்தியுள்ளார்.
கொரோனாவுக்கு அதிகவிலையினைக் கொடுத்து வருகின்ற மாகாராத்திரா மாநிலத்தில் உயிரை கையில் பிடித்தபடி ‘ஒக்ஸிஜன்’ வழங்கிகளுக்காக மக்கள் மருத்துவமனைகளில் காத்திருப்பதும், உயிர்போவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.