கண்டி – ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த மாதத்திற்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத ஸ்தலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.
இதன்படி மத வழிபாட்டுத் தலங்களில் சுமார் 50% மின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில் தலதா மாளிகையின் மின்சாரக் கட்டணம் 13 இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.