சிறுவர் துஷ்பிரயோகங்களை இல்லாதொழிப்பதற்குப் பதிலாக, ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
தற்போது சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் சித்திரவதைகள் போன்றன அதிகரித்துள்ளதாகவும், இந்நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
குழந்தைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதற்கே அரசாங்கம் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தினார்.
சிறுவர் உரிமைகள் பேரவையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.