உணவில் அதிகமாக உப்பு சேர்த்து கொண்டால் உடலில் பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றது.
அதிகமாக உப்பு எடுத்துக்கொள்வதால் ஏற்படும் முக்கிய பக்க விளைவுகள்
இதய நோய்கள்
உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது இதய நோய்கள் உருவாகும். உங்களுக்கு ஆரோக்கியமான இதயம் வேண்டும் என்றால், உப்பு குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம்
அதிகமாக உப்பு எடுத்துக்கொள்ளும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகும் ஆபத்து ஏற்படும். இதய நோய்கள் கூட வரலாம்.
முகங்களில் வீக்கம்
உங்கள் முகமும் கைகளும் கால்களும் வீங்கியதாகத் தெரிந்தால், நீங்கள் தேவையானதை விட அதிக உப்பை உட்கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
எடை அதிகரிப்பு
உங்கள் எடை ஒரு வாரத்தில் அல்லது சில நாட்களில்அதிகரிக்கத் தொடங்கினால், நீங்கள் அதிக உப்பை உட்கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் உணவில் இருந்து உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும்.
நீர்ப்போக்கு
உங்களுக்கு அடிக்கடி நீர்ப்போக்கு ஏற்படுகிறதா? ஆம் என்றால் நீங்கள் அதிகமாக உப்பு உட்கொள்ளுகிறீர்கள் என்று அர்த்தம்.