கொளத்தூர் அருகே இரு சக்கர வாகனத்தில் லிப்டு கேட்ட நபரிடம் , பெட்ரோலுக்கு பணம் கேட்டு கொடுக்காததால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை கொளத்தூர் வளர்மதி நகர் பகுதியில் சங்கர் (வயது 49) என்பவர் கடந்த 4 ஆம் தேதி பின் தலையில் காயங்களோடு உயிர் இழந்து கிடந்தார் சந்தேக மரணமாக பதிவு செய்த போலீசார் வழக்கு குறித்து புலன் விசாரணை மேற்கொண்டதில் அவர் தாக்கப்பட்டு உயிர் இழந்தது தெரியவந்தது
மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொளத்தூர் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சசிக்குமார் (வயது 19), என்பதும் சம்பவத்தன்று வளர்மதி நகர் அருகே நடந்து வந்து கொண்டிருந்த சங்கர் , சசிக்குமாரிடம் லிப்டு கேட்டதாகவும் ,
லிப்டு கொடுத்தால் பெட்ரோல் யார் போடுவார்கள் எனக் கூறி 100 ரூபாய் தர சொன்னதாகவும் அதனை தரமறுத்தால் , அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவரது பாக்கெட்டில் இருந்த 100 ரூபாய் பணத்தை எடுத்து விட்டு சென்று விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது
கீழே விழுந்த சங்கர் பின் தலையில் காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளதும் போலீசாரின் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது