கணவன் – மனைவிக்குள் பணம், பதவி என எத்தனை விஷயங்களில் வேண்டுமானாலும் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் இருவரில் ஒருவர் காணாமல் போகக் காரணமாகிவிடக்கூடாது.
திருமண உறவில் தன்னைத் தொலைக்கிற பெண்கள்
திருமண உறவில் தன்னைத் தொலைக்கிற பெண்கள்
திருமண உறவில் தன்னைத் தொலைக்கிற பெண்கள் சகஜம். கணவன் – மனைவிக்குள் பணம், பதவி என எத்தனை விஷயங்களில் வேண்டுமானாலும் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் இருவரில் ஒருவர் காணாமல் போகக் காரணமாகிவிடக்கூடாது. வேலையை விட்டோ, வேறு தியாகங்கள் செய்தோதான் தன்னைச் சிறந்த இணையாக நிரூபிக்க வேண்டும் எனப் பெண்கள் நினைக்க வேண்டாம். இருவரும் சமம் என நம்பி வாழ்வதில்தான் வாழ்க்கையின் அர்த்தமே அடங்கி இருக்கிறது
சிறு வயது முதல் அம்மா அல்லது அப்பாவுடன் நெருக்கம்மில்லாமலேயே வளர்வது, பெற்றோரில் இருவரின் அல்லது ஒருவரின் அருகாமை கிடைக்காமல் வளர்வது, விவாகரத்து அல்லது இறப்பின் காரணமாக ஒற்றைப் பெற்றோருடன் வாழ்வது, பெற்றோரின் தகாத உறவு,பெற்றோர் தனக்காக நேரம் ஒதுக்காதது, அதிக உணர்ச்சி வசப்படுகிற, கொடூரமாக நடந்துகொள்கிற பெற்றோரின் அணுகுமுறை, தவறான முன்னுதாரணமாக வாழ்கிற பெற்றோரின் வளர்ப்பு, எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டும்,கடிந்து கொண்டும் இருக்கும் பெற்றோரின் மனப்போக்கு…இப்படி வளர்ப்புமுறையில் நிகழ்கிற தவறுகள், ஒரு பெண்ணின் பிற்கால வாழ்க்கையை, உறவைப் பெரிதும் பாதிக்கலாம்.
பெண்களைப் பற்றிய சமுதாயத்தில் பார்வையிலும் பாரபட்சங்களுக்குப் பஞ்சமில்லை. 50 சதவிகித பெண்கள், தங்கள் குழந்தைப் பருவத்தில் யாரேனும் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளவர்களாகவே இருக்கிறர்கள். உலக அளவில் 50 சதவிகித திருமணங்கள் விவகாரத்தில் முடிகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? எல்லோரையும் நம்பிவிடுவது… கண்டதும் காதல் கொள்வது… இப்படிப் பட்ட மனநிலையில் இருக்கும் பெண்கள்தான் பின்னாளில் திருமண உறவில் சிக்கலை சந்திக்கிறார்கள். இத்தகைய பெண்களிடம் சில அறிகுறிகளைக் காணலாம்.
காதல் என்பதை யதார்த்தமான உணர்வாகப் புரிந்துகொள்ளாமல், அதை ஒரு மாயையான, கற்பனையான உணர்வாகவே நினைத்துக் கொள்வார்கள்.
திருமண உறவில் தன்னைத் தொலைக்கிற பெண்கள்
மோசமாக நடந்தும் பெற்றோரிடமிருந்து விடுதலையாக, கண்டதும் காதலில் விழுந்துவிடுவார்கள். அதாவது, ஒரு இழப்பை ஈடுகட்ட, இன்னொரு உறவைத் தேடிக்கொள்வார்கள்.
காதலோ, திருமணமோ தோல்வியடைந்திருந்தால், அந்தச் சோகத்திலிருந்து மீட்டுக் கொள்ளவும் சட்டென இன்னொரு காதலில் விழுவார்கள்.தனிமையில் உழல்கிற பலரும், அதிலிருந்து தப்பிக்க இப்படிப் பொருந்தாத காதல் அல்லது உறவில் புதைந்து போவதுண்டு.
சரி… இதையெல்லாம் மாற்ற முடியுமா ? முடியும். அதற்கு ஒரே தீர்வு… உங்கள் வாழ்க்கையின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வதுதான் ! அதெப்படி ?
கண்டதும் காதல் கொள்ளத் துணியாதீர்கள், எவ்வளவு தான் அருமையான நபராக இருந்தாலும், அவர் மீது கொண்ட நல்லெண்ணத்தால் உடனே அவருடன் காதல் கொள்வதோ, உறவில் இணைவதோ வேண்டாம்.
உங்களுக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறதா ? அவரை அடிக்கடி சந்தித்துப்பேசுங்கள். அவர் உங்களை எப்படி நடத்துகிறார் எனப் பாருங்கள். பொதுவாக பெண்களைப் பற்றிய அவரது அபிப்ராயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். பெண்களை மதிக்காதவர் என்றால், உங்களை மட்டும் மதிப்பார் எனத் தவறான நம்பிக்கை கொள்ள வேண்டாம். அதே நிலைதான் பின்னாளில் உங்களுக்கும் வரும்.
தான் மிகவும் அழகானவர்… மற்றவரைப் கவரக்கூடியவர் என்கிற எண்ணம் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் மிகச்சுலபமாக ஓர் உறவுக்குள் சிக்குகிறார்கள். தன்னைப் பற்றிப் உயர்வு மனப்பான்மையும் அதிக நம்பிக்கையும், வேறு எதைப் பற்றியும் யோசிக்க விடாமல், உடனடியாக ஒரு திருமணத்திலோ, உறவிலோ ஈடுபடச் செய்துவிடுகிறது.
ஒருசில சந்திப்புகளிலேயே உங்களைப் பற்றிய எல்லா உண்மைகளையும் எதிராளியிடம் பகிர்ந்துகொள்வதும், நெருக்கமாவதும், பழைய காதல்,உறவுகளைப் பற்றிய விவரங்களைச் சொல்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.