நீல ஜாவா வாழைப்பழங்கள் என அழைக்கப்படும் நீலநிற நிறம் கொண்ட வாழைப்பழம் கண்டறியப்பட்டுள்ளது.
தோல் மட்டுமல்ல பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருப்பது தான் ஆச்சர்யம். தற்போது இந்த பழத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது கிரீம் போன்ற சுவையுடன் மிருதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், அவை வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவற்றைக் கொண்டு டெசர்ட் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
இருப்பினும், இந்த வாழைப்பழங்கள் மிகவும் அரிதானவை. அவை எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை.
இந்த வாழைப்பழங்கள் பழுத்தவுடன், அவை பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தைக் கொண்டிருக்கும்.
இந்த வகை வாழைப்பழங்கள் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் வளர்க்கப்படுகின்றன.
அதேபோல அவை ஹவாயிலும் நன்கு வளரக்கூடியவை ஆகும்.
இந்த பழங்கள் மூசா பால்பிசியானா மற்றும் மூசா அக்யூமினாட்டா ஆகிய இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும்.
அத்துடன் இந்த வாழைப்பழங்கள் அதிக குளிர்ச்சியை தங்குவதால் உறைபனிக்குக் கீழே உள்ள வெப்பநிலையில் கூட வளரக்கூடியவை என்றும் சொல்லப்படுகின்றது.