இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று (06-11-2022) எகிப்துக்கு சென்றுள்ளார்.
எகிப்தில், கெய்ரோ சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸை (Antonio Guterres) சந்தித்துள்ளார்.
தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது