வயிற்றில் புண் இருந்தால்
வாயில் துர்நாற்றம் வீசும்
உடலில் நீர்சத்து குறைபாடு
இருந்தால் வாயில் துர்நாற்றம் வீசும்
ஜீரண சக்தி குறைபாடு இருந்தால்
வாயில் துர்நாற்றம் வீசும்
உடலில் வெப்பம் அதிகரித்து
இருந்தால் வாயில் துர்நாற்றம் வீசும்
குடலில் புழு இருந்தாலும் மலச்சிக்கல் இருந்தாலும் வாய் துர்நாற்றம் வீசும்
வைத்திய முறைகள்
காய்ந்த மஞ்சளை கருக வறுத்து இதை பொடிசெய்து தினம் இரு வேளை இரண்டு கிராம் பொடியை மிதமான சுடுநீரில் கலந்து பருகி வந்தால் குடற்புண்கள் ஆறும் வாய் துர்நாற்றம் நீங்கும்
மாசிக்காயை பொடி செய்து இதில் மூன்று கிராம் பொடியை பசுநெய்யில் குழைத்து தினமும் இருவேளை ஒரு மாதம் சாப்பிட்டு வர நீண்ட நாட்களாக இருக்கின்ற வாய்ப்புண் மற்றும் வயிற்று புண்கள் குணமாகும் வாய் துர்நாற்றம் விலகும்
சீரண சக்தி குறைபாட்டால் வருகின்ற வாய் துர்நாற்றத்திற்கு வைத்தியம்
வேலிப்பருத்தி இலையை பச்சையாக பத்து இலைகளை பறித்து மைபோல் அரைத்து நீரிலிட்டு காய்ச்சி ஆறவைத்து இதில் ஒரு ஸ்பூன் வசம்பு பொடியை கலந்து தினம் இரு வேளை பத்து நாட்கள் சாப்பிட்டு வர வயிற்று மந்தம் வயிற்று உப்பிசம் நீங்கி சீரண சக்தி அதிகரித்து இதன் விளைவாக வாய் துர்நாற்றம் நீங்கும்
உடலில் அதிக உஷ்ணம் இருந்தால் அதன் விளைவாக வருகின்ற வாய் துர்நாற்றத்திற்கு வைத்தியம்
ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு முழு யானை நெருஞ்சில் செடியை போட்டு ஐந்து நிமிடம் அலசிவர இந்த நீரானது விளக்கெண்ணையை போல வழவழப்பாக மாறிவிடும்
இதை காலை வேளையில் தினந்தோறும் பத்து நாட்கள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் தணியும் வயிற்றுப்புண்கள் ஆறும் வாய் துர்நாற்றம் நீங்கும் ஆண்மை சக்தி அதிகரிக்கும்
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகும் ஆண்களுக்கு நீர்த்த விந்து கெட்டிப்படும்
மலச்சிக்கல் மற்றும் குடல் புழுக்கள் இவைகளால் வருகின்ற வாய் துர்நாற்றத்திற்கு வைத்தியம்
சுத்தமான செக்கில் ஆட்டிய விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணையை சமமாக கலந்து இதில் ஒரு ஸ்பூன் எடுத்து மிதமான சூட்டில் இருக்கின்ற தண்ணீரில் கலந்து வாரத்திற்கு ஒரு நாள் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் குடல் புழுக்கள் இறந்து வெளியாகும் உடல் உஷ்ணம் தணியும் மலச்சிக்கல் நீங்கும் உடல் குளிர்ச்சி பெறும் மேலும் வயிற்றில் புண்கள் ஏற்படாமல் குடலை பாதுகாக்கும்
வயிற்றுப்புண் நீங்க வாய் துர்நாற்றம் விலக எளியவைத்திய முறைகள்
அகத்திக்கீரையை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்கள் ஆறும் வாய் துர்நாற்றம் விலகும் மலச்சிக்கல் நீங்கும்
கற்றாழை ஜூஸ் செய்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் புண்கள் எப்பொழுதும் வராது வாய் துர்நாற்றமும் வீசாது
முட்டைக்கோஸை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும் வாய் துர்நாற்றம் விலகும் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைபாடு குணமாகும்
மணத்தக்காளி கீரையை வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் வயிற்று புண்கள் எப்போதும் வராது வாயில் துர்நாற்றமும் ஏற்படாது