இந்தியாவில் திருமணமான பெண் மருத்துவர் வீட்டு குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் காந்திநகரை சேர்ந்தவர் நிலேஷ் சவுகன். இவர் மனைவி மனிஷா. தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலை தூங்கி எழுந்த நிலேஷ் அருகில் மனைவி இல்லாததை கண்டு பதறினார்.
பின்னர் குளியலறைக்கு சென்ற போது அங்கு மனிஷா தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக மனிஷாவின் சகோதரருக்கு போன் செய்திருக்கிறார்.பின்னர் தகவலறிந்து வந்த பொலிசார் மனிஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், மனிஷாவின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
அவர் சமீபகாலமாக மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.
மனிஷா சகோதரர், வீட்டுக்கு வந்து பார்த்த போது மனிஷாவின் சடலம் கீழே இருந்திருக்கிறது.
நிலேஷ், மனிஷா இடையேயான கணவன் – மனைவி உறவு நல்லபடியாகவே இருந்ததாக மனிஷா சகோதரர் கூறியதோடு இருவருக்குள்ளும் இந்தவொரு பிரச்சினை இல்லை என எங்களிடம் தெரிவித்துள்ளார்.
இறப்பதற்கு முந்தைய நாள் இரவு கணவன் – மனைவி இருவரும் வெகுநேரமாக பேசி கொண்டிருந்தனர் என தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.