யாழ்.கொடிகாமம் – குடமியன் பகுதியில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் வடமராட்சி கிழக்கில் கடலில் மிதந்த மர்ம பொருளை சாரயம் என நினைத்து குடித்தவர்களில் ஒருவர் என பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
நேற்றய தினம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்த மர்ம பொருளை சாராயம் என நினைத்து குடித்த ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் கொடிகாமம் குடமியன் பகுதியை சேர்ந்த 41 வயதான நபர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த நபரின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அவரும் வடமராட்சி கிழக்கில் கடலில் மிதந்துவந்த மதுபானத்தை குடித்த 20 போில் இவரும் உருவர் என கூறப்படுவதுடன் அதிக மதுபோதையே மரணத்திற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.