29.10.2022
உதவித்தொகை:250.000,00
உதவியின் நோக்கம்;உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 6 வது கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது(50 பயன்தரும் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது)
முள்ளி வாய்க்கால் முடிவுற்றதன் பின் எமது பிரதேசங்களில் போதைப்பொருட்களின் வருகையும் போதைவஸ்த்து பாவனையாளர்களின் அதிகரிப்பு எம்மை கவலைக்குள்ளாக்கியுள்ளது. எமது கல்வி கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை
திட்டமிட்டு அளிப்பதற்கு கங்கணம் கட்டி செயல் படுகின்றார்கள். போதைவஸ்த்தினை எமது மாணவச் செல்வங்களை குறிவைத்து மரணத்தின் பிடியில் சிக்க முயற்சிக்கின்றார்கள் நம் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். எமது பிள்ளைகளை நல் வழிப்படுத்துவதற்காக நாம் சிறு முயற்சி எடுத்து வருகின்றோம். எமது பிள்ளைகளின் எதிர் காலத்தினை கருத்தில் கொண்டு உதவும் இதயங்கள் நிறுவனம் மாலை நேரக்கல்வி நிலையங்கள் மற்றும் அறநெறி வகுப்புக்களையும் ஆரம்பித்து வருகின்றோம். அந்த வகையில் இன்று 6 வது கல்வி நிலையமாக மாறாயிலுப்பை நெடுங்கேணி என்னும் கிராமத்தில் ஆரம்பித்து வைத்துள்ளோம்
திரு திருமதி பத்மநாதன் மாலதி (உதவும் இதயங்கள் இங்கிலாந்து மகளிரணியின் காப்பாளர்) அவர்களின் இந்த நல் நாளில் மாறாயிலுப்பை நெடுங்கேணி என்னும் கிராமத்தில் மாலை நேரக் கல்வி நிலையம் திரு திருமதி பத்மநாதன் மாலதி அவர்களின் நிதியில் இருந்து 29.10.2022 இன்று திறந்து வைக்கப்பட்டது.அத்துடன் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவையும் இவர்களே தொடர்ந்து வழங்குவார்கள் மேலும் 50 வது பிறந்தநாளினை நினைவில் கொண்டு 50 பயன்தரும் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டதுடன் வருகை தந்த அனைவருக்கும் மதிய போசனமும் வழங்கி மகிழ்விக்கப்பட்டது .மிகுதி தென்னம்பிள்ளைகள் எமது பண்ணையில் நாட்டப்பட்டது. அந்த வகையில் பொன் விழாக்காணும் திருமதி பத்மநாதன் மாலதி அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்கள் சார்பாகவும் தாயக உறவுகள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அத்துடன் இந்த இடத்தினை தந்துதவியவர்களுக்கும்,சிரமதானப்பணிகள் செய்து உதவி வழங்கியவர்களுக்கும்,இந்த செயற்பாட்டினை செய்து தந்த எமது செயற்பாட்டாளர் திரு ந. கலைச்செல்வன் திரு ச.சசிவன்,செல்வி றேகா அவர்களுக்கும் இந்த நிகழ்விற்கு வருகை தந்து மகிழ்வித்த அனைவருக்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany