வவுனியா மாணவிகள் இருவர் Boxing போட்டிகளில் தங்கப்பதக்ககங்களை பெற்றுள்ளனர்.
அதன்படி வவுனியா திருஞானசம்பந்தர் பாடசாலை மாணவிகளான கீர்த்தனா ,கஜேந்தினி இருவரும் பாடசாலைகள் தேசியமட்ட Boxing போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
குறித்த மாணவிகள் தமது பாடசாலைக்கும் வலயத்துக்கும் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் .
இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.