மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இந்தப் நாடாளுமன்றம் உடைத்துள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரன், மக்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இந்தப் நாடாளுமன்றம் உடைத்துள்ளது.
மக்களுக்கு பல மாற்றங்களை செய்வோம் என கூறி ஆட்சிக்கு வந்தீர்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தீர்கள்.ஆனால் இப்போது என்ன செய்கிறீர்கள்.
13ஆவது திருத்தம், ஜனாதிபதி முறைமை ஒழிப்பு என்று ஆரம்பித்து இப்போது ஒன்றும் செய்யவில்லை. பொய் பொய்யாக கூறி மக்களை மீண்டும் போராடத் தூண்டுகிறீர்கள்.
இந்தப் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் நியாயமற்ற தீர்மானங்களை ஆதரிப்போர் ,மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொள்கிறீர்கள்.
இனி மக்களின் கோபத்தை யாரும் அடக்க மாட்டீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.