2023 ஆம் ஆண்டில் இலங்கையில் கோழி மற்றும் முட்டை உற்பத்தி தொழில் பாரிய நெருக்கடியை சந்திக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும், கால்நடை தீவனத்துக்குத் தேவையான 250,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய தேசிய உணவு ஊக்குவிப்பு சபை திட்டமிட்டுள்ளது, கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவற்றில் எண்பதாயிரம் தாய் விலங்குகள் கடந்த வருடம் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த வருடம் ஏழாயிரம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.