இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரைநகர் கசூரினா கடற்கரையல் உருவாக்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில் வேலணையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரால், அப்துல் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் க.பாலச்சந்திரன், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் மணல் சிற்பக் கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய துணைத் தூதரால் அவருக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.