முருங்கை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் வளருகின்ற மரம் ஆகும் இதில் காட்டுமுருங்கை, கொடி முருங்கை, தபசு முருங்கை என பல வகைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் வீடுகளில் யாழ்ப்பாண முருங்கை, பால் முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பூனை முருங்கை என்ற பல வகைகள் வளர்க்கப்படுகின்றன.
இதன் சுவை கசப்பு. இது தட்பவீரியம் கொண்டது.
முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் வீணாகிவிடும். அதுபோலவே அகத்திக் கீரை அதிக நேரம் வேகவில்லை என்றால் அதன் சத்துக்கள் நம் உடலில் சேராது.
முருங்கையின் எல்லா பகுதிகளுமே பயன்படுகிறது. கண்நோய்கள், பார்வைக் குறைபாடுகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் சிறந்தது.
காணப்படும் சத்துக்கள்
100 கிராம் முருங்கைக் கீரையில் புரதம்-29 கிராம், கார்போஹைட்ரேட்-7 கிராம், நார்ச்சத்து-21 கிராம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின்-450 IU, தையமின்(பி1)-1.3 மி.கி,ரிபோபிளேவின்(பி2)1.7 மி.கி, நியாசின்(பி3)-2.2 மிகி, வைட்டமின் ஈ-10.மி.கி, வைட்டமின் சி -43 மிகி,கால்சியம்-150 மிகி, இரும்புச்சத்து-175மிகி, பொட்டாசியம்-20 மிகி, துத்தநாகம்-7 மிகி, மக்னீசியம்-5.5 மிகி, பாஸ்பரஸ்-180 மி.கி என ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆரஞ்சுப் பழத்தைவிட அதிக வைட்டமின் சி, கேரட்டைவிட அதிக வைட்டமின் ஏ, வாழைப்பழத்தைவிட அதிக பொட்டாசியம், பால் பொருட்களைவிட அதிக கால்சியம் நிறைந்
முருங்கைக் கீரை உடலுக்கு அத்தியாவசியமான 20 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளன.
முருங்கைக் கீரை எலும்புகள் வலுவடைய, தலைவலி தீர, கண்வலி நீங்க, வீக்கம் குறைய, ஹீமோகுளோபின் அதிகரிக்க,கண்பார்வை மங்கல் மாற, கூந்தல் அடர்த்தியாக வளர போன்றவற்றிற்கு பயன்படுகிறது.