பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் ரோகன் ரத்வத்தே வடமராட்சிக்கு தனிப்பட்ட முறையில் முன்னெடுத்த பயணித்தின் போது அவரது பாதுகாவலரினால் நாய் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றது. இராஜாங்க அமைச்சர் தனது குடும்ப நண்பர் ஒருவரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு வளர்ப்பு நாய் இராஜாங்க அமைச்சர் ரோகன் ரத்வத்தேயை கண்டதுடன் குரைத்ததுடன் கடிக்க முற்பட்டுள்ளது. அதனால் இராஜங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
அந்த நாய் உயிரிழந்துள்ளது. இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த மெய்ப்பாதுகாவலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.