ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் பாலித ரங்கே பண்டாரவிற்கு கட்சியில் மற்றுமொரு பதவி கிடைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், தலைவர், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு வேறு அதிகாரிகளை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும், தேசிய அமைப்பாளர் பதவியை சாகல ரத்நாயக்கவும் வகிக்கின்றனர்.