கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்காக முத்துராஜவெல பகுதியில் 10 மெகாவாட் மின் சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
இதனூடாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதி களில் ஒரு நாளில் சேகரிக்கப்படும் 700 தொன் குப்பையிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் குப்பை பிரச்சினைக்குத் தீர்வு கிடைப்பதுடன், மின்சக்தியும் சேகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றில் 700 தொன் குப்பையிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.