ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது குழுவினர் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கு பொறுப்பான கடமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதன்படி சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இரவு 11.35 மணியளவில் ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.