September 30, 2022 01:36 pm
Bookmark and Share
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக கொழும்பு கோட்டை நீதவான் மற்றும் அந்த நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்தும் அதனை தடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட்டு எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.