அமெரிக்காவில் சாப்பிடும் போது குழந்தை முகக் கவசம் அணியாததால் விமானப் பணிப்பெண் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவரை விமானத்தை விட்டு வெளியேற சொன்ன சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவிலிருந்து புறப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
வீடியோவில், முகக் கவசம் விதியை மீறியதால் உடனடியாக உடமைகளை எடுத்துக்கொண்டு விமானத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்பெண் கர்ப்பிணி பெண்ணிடம் கூறுகிறார்.
கர்ப்பிணி பெண் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை, சாப்பிடும் போது முகக் கவசம் அணியாததால் பணிப்பெண் குடும்பத்தினரை விமானத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார்.
நீங்கள் உடனடியாக விமானத்தை விட்டு இறங்க வேண்டும் இல்லையென்றால் நான் பொலிசாஸை அழைப்பேன் என விமான பணிப்பெண் குடும்பத்தினரை எச்சரிக்கிறார்.