ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜப்பான் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் புமியோ கிசிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதிச்சடங்கு
ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதி அரச சடங்கிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ள உள்ளார்.
ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த சின்சோ அபே, ஜூலை 8 ஆம் திகதி, தனது 67 வயதில், தனது அரசியல் கட்சியின் பிரசாரக் கூட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதிச் சடங்கிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதேவேளை, உத்தேச நன்கொடையாளர் மாநாடு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸுக்குப் பயணம்
ஜப்பானுக்கான பயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸுக்குப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிலாவுக்கான தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸை சந்திக்க உள்ளார்.