நாடாளுமன்ற நிலத்தில் கஞ்சா தோட்டம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா யோசனை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெற்று நிலத்தில் மாதிரி கஞ்சா பயிர்ச்செய்கையை முன்னெடுக்கவும் என முன்மொழிந்துள்ளார்..
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது.
டயானா கமகேவின் அறிவிப்பு
இலங்கையில் கஞ்சா பயிரிடுவது சட்டவிரோதமானது அல்ல என்றும், கஞ்சா ஏற்றுமதியின் மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணியை ஈட்டமுடியும் என்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
மேலும் கஞ்சா ஏற்றுமதி மூலம் டொலர்களை சம்பாதிப்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், கஞ்சாவை விற்பனை செய்து அபிவிருத்தியடைந்த நாடுகள் உலகில் இல்லை எனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.