கடப்பா அருகே சீனியர் மாணவியை ஜூனியர் மாணவர் கிண்டல் செய்ததால் ஐஐஐடி மாணவர்கள் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் இ டுபுலபாயாவில் ஐஐஐ டி என்ற கல்லூரி இ ய ங்கி வருகிறது
இங்கு ப டிக்கும் மூன்றாம் ஆண்டு படிக்கும் சீனியர் மாணவியை முதலாம் ஆண்டு படிக்கும் ஜுனியர் மாணவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது இதனால் சினியர் – ஜுனியர் மாணவர்களிடையே கடுமையான மோதல் ஏற்ப்பட்டது
இதனால் கல்லூரி விடுதியில் மாணவர்கள் இருதரப்பினராக பி ரிந்து மா றி மா றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் இதில் ஐந்து மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
தகவல் அறிந்து வந்த ஆர்கே வாயில் போலீசார் இரு பிரிவினரையும் கலைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இரவு முழுவதும் கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர்