ஜனாதிபதியின் இங்கிலாந்து மற்றும் ஜப்பான் விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது.
பொதுஜன பெரமுன கோரிக்கை
தங்களுக்கு மேலும் பத்து அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
கொழும்பு, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் மாவட்டத் தலைவர்கள் இந்தப் பட்டியலில் உள்ளடங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக 18 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தற்போதைய அரசாங்கத்தில் 38 இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.