இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் இந்த ஆண்டின் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,03,558 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்முலம், இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,89,067-ஆக உயர்ந்துள்ளது.
2021-ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குப் பிறகு 1 லட்சம் புதிய தொற்றுக்களை பதிவு செய்த நாடாக இந்தியா மாறியுள்ளது.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
ஒருபுறம் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்தாலும், இந்தியா கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 5,48,625 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.