யாழில் பொலிசாரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிசாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.
காயத்துக்குள்ளான பொலிசார் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,விரலை கடித்த இளைஞரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்இதேவேளை, சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை யாராலும் தாக்கவோ அல்லது அவர்களது கடமைகளைத் தடுக்கவோ முடியாது
என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.அவர் வெளியிட்ட கருத்துத் தவறாகப் புரிந்துகொண்டு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறினார்.எந்தவொரு காரணமும் இல்லாமல் பொலிஸ் உத்தியோகத்தர், ஒருவரைத் தாக்கினால், அவர் உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு வழங்க முடியும்.
சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.