கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். செப்டெம்பர் 12ஆம் திகதி கைதிகள் தினத்தை முன்னிட்டு குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இவ்வாறு குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அபராதம் செலுத்த முடியாத மற்றும் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளில் நான்கு பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.