இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பூட்டிய வீட்டிற்குள் இருந்த குளிர்சாதன பெட்டியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஆந்திரா மாநிலத்தின் கர்னிகாநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஆணின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்
முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் 38 வயதான சித்திக் அகமது எனவும் அவர் ஒரு தையல்காரர் எனவும் தெரிய வந்தது மேலும், வீட்டை பூட்டிவிட்டு மனைவி தலைமறைவான நிலையில், அவரே கணவரை கொன்றிருக்கலாம் எனவும் கூறப்பட்டது
ஆனால், அதில் உண்மை இல்லை என பின்னர் தெரிய வந்துள்ளது சித்திக்கின் மனைவி ரூபினாவுடன் முறைதவறிய தொடர்பில் இருந்து வரும் அலி என்பவரே கொலை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது மட்டுமின்றி, கொலைக்கு பின்னர் ரூபினாவுக்கு வீடியோ அழப்பில், சித்திக்கியின் சடலத்தை ரூபினாவுக்கு காட்டியதும் அம்பலமாகியுள்ளது
கடந்த மாதம் 30ம் திகதி நள்ளிரவு நேரம் சித்திக்கியின் குடியிருப்புக்குள் அலி அத்துமீறி நுழைந்துள்ளார் பின்னர் எடுத்து வந்த ஆயுதத்தால் சித்திக்கியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார் இதனால் சுருண்டு விழுந்த சித்திக், இறுதியில் மரணமடைந்துள்ளார்
தொடர்ந்து தமது காதலி ரூபினாவுக்கு வீடியோ அழைப்பில் சடலத்தை காட்டிய பின்னர், அதை வெளியே மறைவு செய்ய முயன்று, முடியாமல் போயுள்ளது இதனையடுத்தே, சடலத்தை குளிர்சாதன பெட்டிக்குள் மறைவு செய்ய அலி முடிவு செய்துள்ளார்
ஆனால் சித்திக்கின் முழு உடலையும் குளிர்சாதன பெட்டிக்குள் மறைவு செய்ய அலியால் முடியாமல் போயுள்ளது இந்த நிலையிலேயே, பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதும், அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்ததும்
இந்த வழக்கில், சித்திக்கின் குடியிருப்புக்குள் அலி நுழைவதும், சில மணி நேரத்திற்கு பின்னர் வெளியேறுவதும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பாதிவாகியிருந்தது
மேலும், தொலைபேசி அழைப்புகள் பதிவான நேரமும், யார் யாருக்கு அழைப்பு சென்றுள்ளது என்ற தகவலும் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது இன்னும் ஒருசில நாட்களில் தலைமறைவாகியுள்ள ரூபினா மற்றும் அலி ஆகிய இருவரையும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் தரப்பு உறுதி அளித்துள்ளது