சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர், (Samantha Power) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மனிதாபிமான உதவியாக மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.