நாடாளுமன்றத்தை கூட்டி தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அனுமதி வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மேலும், 6 மாத கால அவகாசம் அவர்களுக்கு தருவதாகவும் இல்லை என்றால் சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்று நாட்டு மக்களின் முடிவை கேட்பதாகவும் ஜனாதிபதி ரணில் கூறியுள்ளார்.
“நான் நாடாளுமன்றத்தை ஒருமுறை கூட்டி தேர்தல் சீர்திருத்தங்களை அனுமதிப்பேன். அதற்காக அவர்களுக்கு 06 மாத கால அவகாசம் தருகிறேன். இல்லை என்றால் சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்று நாட்டு மக்களின் முடிவை கேட்பேன்.”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.