கோவையில் வீட்டுப்பத்திரத்தை கொடுக்க மறுத்த மாமியாரை அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
குப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் – மோகனப்பிரியா தம்பதி. கூலித்தொழிலாளியான சதாசிவம் குடும்பத்தை சமாளிக்க அடிக்கடி கடன் வாங்கியதாகவும், கடனை திரும்ப செலுத்த இயலாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடனை திரும்ப செலுத்த வீட்டுப்பத்திரத்தை கொடுக்குமாறு மாமியார் சாந்தாமணியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சதாசிவம் நேற்றிரவு குடிபோதையில் மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.