கொழும்பில் உள்ள பிரதான வங்கியின் ATM அட்டையில் பணம் பெற முயற்சிக்கும் நபர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது.
ATM அட்டையில் பணம் பெற முயற்சித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெளியிட்ட தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த தகவல்
குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ATM இயந்திரத்தில் பணம் பெற சென்ற நிலையில் அவரது அட்டையை உட்செலுத்தியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறிது நிமிடங்களிலேயே ஜெனரேட்டர் இயங்கி ATM இயந்திரம் இயங்க ஆரம்பித்துள்ளனர்.
எனினும் அட்டை உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளது. உரிய வங்கிக்கு அழைப்பேற்படுத்தி சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார். எனினும் அந்த அட்டையை பெற 5 நாட்களாகும் என வங்கி அறிவித்தள்ளது.
இறுதிச் சடங்கிற்காக தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் யாழ்ப்பாணம் செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்திருந்த வேளையில், இவ்வாறு அட்டை சிக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கியின் செயற்பாட்டினால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் வசிக்கும் உறவினரை அழைத்து பணம் கேட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் வங்கி அதிக அவதானம் செலுத்த வேண்டும். அவசர தேவைக்காகவே அட்டைகளை பயன்படுத்துகின்றோம். எனினும் அவ்வாறு சிக்கிக் கொண்டால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகின்றார் என்பதனை வங்கி அறிந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரத்திற்கு பணம் பெற வந்து 5 நாட்கள் காத்திருப்பது என்பது சாதாரண விடயம் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.